மீண்டும் அரசுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் மைத்திரிபால சிறிசேன!!!!

மீண்டும் அரசுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் மைத்திரிபால சிறிசேன!!!!

இலங்கையின் எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் புதிய கூட்டணியொன்றின் ஊடாக போட்டியிடுவதற்கு முன்னாள் அரச தலைவர் பல தரப்பினருடனும் பேச்சுக்களை ஆம்பித்திருக்கின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பெரமுனவினரால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் தற்சமயம் நாட்டில் நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு மைத்திரி இந்த முடிவை எடுத்திருப்பதாக சுதந்திரக் கட்சியின் வாட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிட வேண்டும் என்கின்ற அழுத்தம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டத்திலிருந்து அவருக்கு ஏற்பட்டு வருகின்றது.

இந்த அழுத்தத்திற்கு மத்தியிலேயே பெயரளவில் அவர் போட்டியிட வேண்டும் என்கின்ற முடிவை எடுத்திருப்பதாக சுதந்திரக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது தடவை தான் போட்டியிடப் போவதில்லையென தெரிவித்திருந்த முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை.

எனினும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட இருந்த காலப்பகுதியில் இரண்டாவது தடவையாக போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் பற்றி உச்சநீதிமன்றத்திடம் மைத்திரி வினவியிருந்தார்.

எனினும், பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்கின்றதோடு, கோட்டா-மஹிந்த அரசாங்கம் அவருக்கு எந்த பதவியையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி மைத்திர அணியினர் சில முக்கியமான தரப்பினருடன் கூட்டணி அமைப்பது குறித்து கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், எங்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்தன தேரர், குமார் குணரத்னம் தலைமையிலான முன்னிலை சோஷலிசக் கட்சி உள்ளிட்ட பலருடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பேராசிரியர் ரோஹண பியதாஸ கலந்துரையாடலை நடத்தியிருப்பதாக தெரிவித்தார்.

குறிப்பாக இந்தக் கலந்துரையாடலில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செலயாளர் ஞானசார தேரரிடம், அரசாங்கத்துடன் இருந்துகொண்டே மைத்திரிக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post