இராணுவ முகாம்களில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி எங்களுக்கு வேண்டாம்!

இராணுவ முகாம்களில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி எங்களுக்கு வேண்டாம்!

இராணுவ மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமாயின் எங்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரரா குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அவரும் தனது கட்சியின் மற்றைய உறுப்பினர்களும் இந்த நிலையில் உள்ளதாகவும், இதனை நிலைநிறுத்த எடுக்கப்பட்ட முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கட்சிகள் இராணுவத்துடனோ அல்லது இராணுவ வீரர்களுடனோ எந்த தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றும், அரச மருத்துவமனைகள் போதியளவு இருக்கும் போது இராணுவ முகாம்களில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post