இலங்கையில் சிறிய அளவிலான நில நடுக்கங்கள் பதிவாகும்! பேராதனை பல்கலைக்கழகம்!

இலங்கையில் சிறிய அளவிலான நில நடுக்கங்கள் பதிவாகும்! பேராதனை பல்கலைக்கழகம்!


இலங்கையிலும் இலங்கையை அண்மித்த பகுதிகளிலும் எதிர்காலத்தில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவாகக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவு தெரிவித்துள்ளது.


இலங்கைக்கு அருகில் கடல் ஆழத்தில் 04 ரிக்டர் அளவான நில அதிர்வொன்று பதிவாகியிருந்தது.


இந்தோ - அவுஸ்ரேலிய புவித்தகடினில் ஏற்பட்ட பிளவே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் எதிர்காலத்திலும் அவ்வாறான சிறிய நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவு தெரிவித்துள்ளது.


எனினும் அவை நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துவனவாக அமையாது என்றும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post