மாவனெல்லையில் கைதான யுவதி தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர்‌ தெரிவித்த மேலதிக தகவல்!

மாவனெல்லையில் கைதான யுவதி தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர்‌ தெரிவித்த மேலதிக தகவல்!


ஈஸ்டர் ஞாயிறு  தற்கொலைத்‌ தாக்குதல்‌ சம்பவத்தின்‌ பிரதான சூத்திரதானியான ஸஹ்ரான்‌ ஹாஷிமின் பயிற்ச நிலையத்தில்‌ பயிற்‌சி பெற்றதாக கூறப்படும்‌ யுவதி ஒருவர்‌ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்‌ ஊடகப்‌ பேச்சாளர்‌ பிரதி பொலிஸ்மா அதிபர்‌ அஜித் ரோஹண தெரிவித்தார்‌.


இதுத்‌ தொடர்பில்‌ அவர்‌ மேலும்‌ கூறியதாவது, 


ஈஸ்டர் ஞாயிறு இன தற்கொலை தாக்குதல்‌ சம்பவம்‌ தொடர்பில்‌ குற்றப்‌புலனாய்வு பிரிவினரும்‌ பயங்கரவாத விசாரணை பிரிவினரும்‌ விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்‌.


இந்நிலையில்‌, ஈஸ்டர் ஞாயிறு இன தாக்குதல்‌ சம்பவத்தின்‌ பிராதன சூத்திரிதாரியான ஸஹ்ரான்‌ ஹாஷிமின்‌ அடிப்படைவாத பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சி பெற்றதாக கூறப்படும்‌ யுவதி ஒருவர்‌ கைது செய்யப்பட்டுள்ளார்‌.


மாவனெல்லை - ஹிங்ஹூல பகுதியைச்‌ சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்‌.


ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்‌ சம்பவங்கள்‌ தொடர்பில்‌ முன்னெடுக்கப்பட்டு வரும்‌ விசாரணைகளுக்கமைய, பயங்கரவாதி ஸஹ்ரான்‌ பெண்கள்‌ சிலருக்கும் அடிப்படைவாத பயிற்சிகளை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.


$ads={1}


அதற்கமைய, இவ்வாறு பயிற்சி பெற்றதாக கூறப்படும்‌ 06 பெண்கள்‌ கடந்த டிசம்பர்‌ மாதம்‌ 07ஆம்‌ திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்‌. இந்நிலையில்‌ நேற்று (19) சந்தேக நபரான யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்‌.


இதனைத்‌ தொடர்ந்து பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைத்துச்‌ செல்லப்பட்ட யுவதியை, பயங்கரவாத தடைச்சட்டத்தின்‌ கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த பயங்கரவாத விசாரணைப்‌ பிரிவினர்‌ நடவடிக்கை எடுத்து வருகின்றனர்‌.


இதேவேளை, கைது செய்யப்பட்ட யுவதியின்‌ தந்தை மற்றும்‌ சகோதரர்கள்‌ மூவரும்‌ மாவனெல்லை புத்தர்‌ சிலை உடைப்பு மற்றும்‌ ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்‌ சம்பவங்கங்கள்‌ தொடர்பில்‌ ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்‌. தற்போது அவர்கள்‌ சிறை வைக்கப்பட்டுள்ளனர்‌ என்றார்.


-செ.தேன்மொழி


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.