தோனி திரைப்படத்தில் நடித்த மேலுமொரு நபர் தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தோனி திரைப்படத்தில் நடித்த மேலுமொரு நபர் தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!


தோனி வாழ்க்கை வரலாறு சினிமாவில் கதாநாயகன் சுஷாந்த் சிங்குடன் இணைந்து நடித்தவர்களில் ஒருவரான நடித்த சந்தீப் நாகர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


நடிகர் அக்‌ஷய் குமார் நடித்த கேசரி, சுஷாந்த் சிங் நடித்த எம்.எஸ். தோனி ஆகிய திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் சந்தீப் நாகர் நடித்திருந்தார். 


முகநூல் பதிவு மூலம் தமது வாழ்க்கை மற்றும் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவுகளை விவரித்த அவர் இறுதியில் தற்கொலை முடிவை அறிவித்தார்.


மும்பையில் வசிக்கும் சந்தீப் நாகர் தமது தற்கொலைக்கு குடும்பத்தினர் உள்பட யாரும் காரணமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். சந்தீப் நாகரின் துயர முடிவு இந்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சந்தீப் நாகர் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.