கொரோனா தடுப்பூசி; ஒரு மில்லியன் பேருக்கு ஏற்றிய பின்னரே நான் ஏற்றிக்கொள்வேன்! -ஹரின்

கொரோனா தடுப்பூசி; ஒரு மில்லியன் பேருக்கு ஏற்றிய பின்னரே நான் ஏற்றிக்கொள்வேன்! -ஹரின்


நாடளாவிய ரீதியில் குறைந்தபட்சம் சுமார் ஒரு மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னரே நான் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார்.


நாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே ஹரின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.


அப்பதிவில், கொரோனா தடுப்பூசியை இப்போது பெற்றுக்கொள்வதில்லை எனத் தீர்மானித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கும் ஹரின், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னிலையில் நின்று போராடும் ஊழியர்கள் மற்றும் இலகுவில் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய தரப்பினருக்கே முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.


மேலும் 'நாடளாவிய ரீதியில் குறைந்தபட்சம் சுமார் ஒரு மில்லியன் பொதுமக்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னரே நான் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.