மஸ்கெலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு தொற்றுறுதி; பிரபல பாடசாலை ஒன்று உடனடி பூட்டு!

மஸ்கெலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு தொற்றுறுதி; பிரபல பாடசாலை ஒன்று உடனடி பூட்டு!


மஸ்கெலியாவில் உள்ள ஸ்டாஸ்பி தோட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தின் தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்


அதன்படி, குறித்த கொரோனா பாதிக்கப்பட்ட மாணவன் படிக்கும் மஸ்கெலியா தமிழ் மகா வித்தியாலய பாடசாலையினை இன்று முதல் (01) தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி டி.சந்திரராஜன் மேலும் தெரிவித்தார்.


கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் நோர்வூட் பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார், பின்னர் அதன் 35 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.


கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குறித்த மூன்று பேரின் வீட்டிற்கு கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர் வந்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது என்று மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி மேலும் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.