ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை!

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை!


ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் முக்கிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.


இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தையே நடத்தப்படுகிறது.


இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தெரியப்படுத்தப்பட்டதாக ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.


இந்த சந்திப்புக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜயவர்த்தனவே ஏற்பாடு செய்திருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது தொடர்பான யோசனையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.