கார் ஒன்றினை கொள்வனவு செய்ய வந்தது போல் நடித்து திருடிச் சென்ற நபர்கள்!

கார் ஒன்றினை கொள்வனவு செய்ய வந்தது போல் நடித்து திருடிச் சென்ற நபர்கள்!

மத்தேகொட பகுதியில் 52 இலட்சம் ரூபாய் காரொன்றை கொள்வனவு செய்வதாகக் கூறி அதனை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மத்தேகொட பகுதியில் 52 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றை விற்பனை செய்வதாகவும், அந்த காரை கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் தொலைபேசியூடாக தொடர்புக் கொள்ளுமாறும் நபரொருவர் இணையத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

குறித்த நபர் காரின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் தந்தை ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களை அந்த விளம்பரத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று குறித்த காரை கொள்வனவு செய்வதற்கு விளம்பரம் செய்த நபருக்கு பல தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து காரை பார்வையிடுவதற்காக நால்வர் வந்துள்ளனர். வந்தவர்களில் மூவர் காரை செலுத்தி பார்க்க வேண்டும் என்று கூறி, கார் உரிமையாளருடன் அதனை ஓட்டிச் சென்றுள்ளனர். வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றதும் சந்தேக நபர்கள் உரிமையாளரை வெளியே தள்ளி காரை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பில் மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.