
கொழும்பு வர்த்தகரின் காம லீலைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுப்பெற்றது.
கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகர் ஒருவரின் காம லீலைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுப்பெறத் தொடங்கியுள்ளது.
நட்சத்திர ஹோட்டல்களுக்கு வருகை தரும் இளம் பெண்களை தமது கையடக்க தொலைபேசியில் அவர்களின் அனுமதியின்றி இரகசியமான முறையில் வீடியோ பதிவு செய்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த வர்த்தகரான என்.வி. திவாகரன் என்பவருக்கு எதிராக இவ்வாறு எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான ரோஹித ராஜபக்ஷவின் மனைவி டட்யானாவின் முன்னாள் வளர்ப்புத் தந்தையான இவரின் செயற்பாடுகளை கண்டித்து ரோஹித ராஜபக்ஷ ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
மேலும் இவரை பல வருடங்களுக்கு முன் இருந்தே எனது மனைவியின் குடும்பத்தினர் தொடர்பை துண்டித்திருப்பதாகவும், அவரின் இந்த செயலுக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் குறித்த டீவீட்டில் தெரிவித்துள்ளார்.
அதில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவங்கள் தொடர்பில் தாம் அதிர்ச்சியடைவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தாமும், தமது மனைவி டட்யானாவும் இந்த பாலியல் துன்புறுத்தல் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.