
கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிட அரசியல்வாதிகளுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் நிர்வாகம் என்பது சுயாதீனமான ஒரு நிர்வாக அமைப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விளையாட்டுத்துறைக்குள் அரசியலை கொண்டுவருவது சிறந்ததொரு செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், விளையாட்டுச் சட்டங்களை புதுப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவின் மூலம் புதிய விளையாட்டுத்துறை சட்ட மூலமொன்று உருவாக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த அரவிந்த டி சில்வா தலைமையில் மற்றுமொரு குழு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.