கொரோனா சடலம் விவகாரத்தில் இலங்கை அரசும் பிரதமரும் பின்வாங்கியமை ஏமாற்றமளிக்கிறது! -அமெரிக்கா
advertise here on top
advertise here on top

கொரோனா சடலம் விவகாரத்தில் இலங்கை அரசும் பிரதமரும் பின்வாங்கியமை ஏமாற்றமளிக்கிறது! -அமெரிக்கா

Alaina Teplitz அலைனா டெப்லிட்ஸ்

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக அறிவித்து, தற்போது அந்த தீர்மானத்திலிருந்து இலங்கை பின்வாங்கியமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி லெப்லிட்ஸ் நேற்று (18) தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அந்த டுவிட்டர் பதிவில், 


"பாரபட்சமான தகனக்கொள்கையிலிருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்கியிருக்கின்றமை ஏமாற்றமளிக்கிறது. மக்கள் உட்பட அண்மையில் உயிரிழந்த அன்புக்குரியவர்கள், ஜனநாயக அரசாங்கத்தில் அவர்களின் உரிமைக்கான மதிப்புக்குரியவர்களாவர்." என்று குறிப்பிட்டுள்ளார்.


$ads={1}


இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, சுகாதார தொழிநுட்ப குழுவின் ஆலோசனைகளுக்கு அமையவே கொரோனா சடல விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியுள்ள நிலையில், அலைனா லெப்லிட்ஸ் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.


அத்தோடு இந்த தீர்மானத்தில் மாற்றமில்லை என்பதை அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-எம்.மனோசித்ராPrevious News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.