கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான விசேட அறிவித்தல்!

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான விசேட அறிவித்தல்!

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள், குறைந்தது ஆறு மாத காலம் நிறைவடையும் வரையில், புகைத்தல் மற்றும் மதுசாரம் என்பனவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வைத்தியதுறை ஆலோசனை வழங்கயுள்ளது.

புகைத்தல் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர், வைத்தியர் சமதி ராஜபக்ஷ, கொழும்பில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், நோய் எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்தும் தன்மையானது, புகைத்தல் மற்றும் மதுசாரம் என்பனவற்றை பயன்படுத்துபவர்களிடையே மிகவும் பலவீனமானக இருக்கும்.

எனவே, தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் குறித்த நபர்கள் புகைத்தல் மற்றும் மதுசாரம் என்பனவற்றை பல மாதங்களுக்கு தவிர்க்கவேண்டும்.

புகைத்தல் மற்றும் மதுசாரம் என்பனவற்றை பயன்படுத்துபவர்கள் அந்த பழக்கத்தை கைவிடுவதற்கான சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் புகைத்தல் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர், வைத்தியர் சமதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.