
சாவகச்சேரி மீசாலை மேற்கு பகுதியில் கசிப்பு உற்பத்தி தொடர்பான தகவல் மது வரித்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பெருமளவான கசிப்பையும் கைப்பற்றினர்.
அவரிடம் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்தபோது, தான் வங்கியில் பெற்ற கடனை மீள செலுத்துவதற்கு அதிக வருமானம் தேவையாக உள்ளமையால் தான் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டேன் என தெரிவித்துள்ளார்.
குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-மயூரன்