இரண்டாவது முறையாக தடுப்பூசி இரண்டு மாதங்களுக்கு பின்னர் செலுத்த நடவடிக்கை!

இரண்டாவது முறையாக தடுப்பூசி இரண்டு மாதங்களுக்கு பின்னர் செலுத்த நடவடிக்கை!


நாட்டில் முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகளை செலுத்த இரண்டு மாதங்கள் ஒத்திவைக்கக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பச் சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுத் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண் டோபுள்ளே தெரிவித்துள்ளார்.


மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என ஆராய்ச்சிகளின் படி தெரியவந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி ஒரு மாதத்திற்குப் பின்னர் இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்த இதற்கு முன்னர் தீர்மானித்தனர்.


இந்நிலையில், இரண்டாவது கொரோனா தடுப்பூசி மூன்று மாதங்களுக்குப் பின்னர் செலுத்துவது  குறித்து விசேட ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.


அத்துடன் அரச, சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள கொரோனா தடுப்பூசிகளைத் தனியார்த்துறை சுகாதார ஊழியர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.