மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கல் - நேர்முகப் பரீட்சை தினம் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கல் - நேர்முகப் பரீட்சை தினம் அறிவிப்பு!

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி; தெரிவித்துள்ளார்.

இதற்காக விண்ணப்பிப்பதற்கென வழங்கப்பட்டிருந்த காலம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

சுமார் 11,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இணையத்தளத்தின் ஊடாக நேர்முகத் தேர்வு இடம்பெறும். நேர்முகத் தேர்வு இடம்பெறும் தினம் பற்றியும் இணையத்தளத்தின் ஊடாக அறிவிக்கப்படும்.

அரச சார்பற்ற 15 உயர்கல்வி நிறுவனங்களில் 96 பாடநெறிகளைப் பயில்வதற்காக மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 2017ம் 2018ம், 2019ம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழக வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

பாடநெறிகளைப் பூர்த்தி செய்ததன் பின்னர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒருவருட கால சலுகைக்காலம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.