இலங்கையிலிருந்து மீண்டும் கல்ஃப் எயார்வின் நேரடி விமான சேவை ஆரம்பம்!

இலங்கையிலிருந்து மீண்டும் கல்ஃப் எயார்வின் நேரடி விமான சேவை ஆரம்பம்!

பஹ்ரைன் நாட்டின் தேசிய விமான சேவையான கல்ஃப் எயார், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மீண்டும் அதன் நேரடி சேவைகளை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வாராந்தம் இரண்டு விமானங்களை சேவையில் ஈடுபட்டுத்தவுள்ளதாக கல்ஃப் எயார் அறிவித்துள்ளது.

கல்ஃப் எயார் 1981 முதல் பஹ்ரைன் மற்றும் இலங்கை இடையே நேரடி விமான சேவைகளை முன்னெடுத்துள்ளது.

அபுதாபி, துபாய், குவைத், ரியாத், ஜித்தா, தம்மாம், மதீனா, மஸ்கட், கெய்ரோ, அம்மன், காசாபிளாங்கா, லண்டன், பாரிஸ், பிராங்பேர்ட், ஏதென்ஸ், பேங்காக், மணிலா, டாக்கா, அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல இடங்களுக்கு கல்ஃப் எயார் சேவைகளை முன்னெடுத்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் ஒருபோதும் பறப்பதை நிறுத்தாத சில விமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய கல்ஃப் எயார், அதன் வலையமைப்பு முழுவதும் உள்ள அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.