நாட்டில் கடந்த சில தினங்களில் கொரொனா தொற்று சடுதியாக குறைந்தது ஏன்? பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் விளக்கம்!

நாட்டில் கடந்த சில தினங்களில் கொரொனா தொற்று சடுதியாக குறைந்தது ஏன்? பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் விளக்கம்!


நாட்டில் PCR பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த வாரம் சுமார் ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அண்மைய நில நாட்களாக ஐநூறுக்கும் குறைந்தளவான தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளங் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

$ads={1}

இதேவேளை பொதுசுகாதார பரிசோதகர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதன் காரணமாகவே தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post