எம்மீதான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கிறோம்; இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி -ஊடக அறிக்கை

எம்மீதான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கிறோம்; இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி -ஊடக அறிக்கை

 

Sri Lanka Jama'athe Islami

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பற்றியும், மாணவர் இயக்கத்தைத் தொடர்புபடுத்தியும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் தொடர்பாகவும் பல அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டோம்.

இக்குற்றச்சாட்டுக்களை நாம் முற்றாக மறுக்கும் அதேவேளை இவை பற்றிய எந்த நீதி விசாரணைக்கும் எமது பூரண ஒத்துழைப்பை வழங்கவும் உறுதியளிக்கிறோம்.

தவறான நோக்கங்களுடன் ஓரிருவரினால் வழங்கப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே இந்த முடிவுகள் பெரும்பாலும் எட்டப்பட்டுள்ளன என்றே நாம் நம்புகின்றோம்.

உரிய நீதி விசாரணைகளின் போது சட்ட ரீதியாக எமது குற்றமற்றதன்மையை நிரூபிக்க முடியும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்.


எம்.எச்.எம். ஹஸன்
உதவிப் பொதுச் செயலாளர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிகருத்து தெரிவிக்க..

Previous Post Next Post