முஸ்லிம் குழந்தைகள் சிங்கள மொழி படிக்க வேண்டும்! -ஷுக்ரா முனவ்வர்

முஸ்லிம் குழந்தைகள் சிங்கள மொழி படிக்க வேண்டும்! -ஷுக்ரா முனவ்வர்


முஸ்லிம் குழந்தைகள் சிங்கள மொழியை படிக்க வேண்டும் என இலட்சாதிபதி நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற ஷுக்ரா முனவ்வர் குறிப்பிட்டுள்ளார்.

அவரை கௌரவிக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

இன்று எமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய பிரச்சினைதான் மொழி பிரச்சினை. மேலும் நான் என கூறாமல் நாம் என கூறினாலேயே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.

சிங்கள மக்கள் சிங்கள மொழியை கதைக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு தமிழ் மொழியை பயன்படுத்துகிறார். ஆனால் இந்த நாட்டின் அரச மொழி சிங்கள மொழி என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதனை அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

$ads={1}

நான் கிழக்கு மாகாண பிள்ளைகளோடு பழகி உள்ளேன். அந்த பிள்ளைகளுக்கு சிங்கள மொழி தெரியாது. தெற்கில் உள்ள மாணவர்களுக்கு சிங்களம் நன்றாக கதைக்க முடியும் என்றாலும் சிலருக்கு தெரியாது. இதனால் நம்மிடையே இடைவெளி உருவாகியுள்ளது.

எமது பிள்ளைகளுக்கு மூன்று மொழிகளையும் படிக்க வைக்கவும். விசேடமாக சிங்கள் மொழியை படிக்க வையுங்கள். எமது நாட்டின் அரச மொழியை நாம் தெரிந்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்கும் படிப்பினை பாதியில் நிறுத்துவதே இன்று முஸ்லிம் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை. இதனை நான் அச்சமில்லாமல் கூறுவேன். என்னை விட புத்திசாலியான எனது நண்பிகள் உள்ளனர். அவர்களை படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். பெண்களும் மனிதர்கள் தான். எம்மை கீழ் மட்டத்திற்கு போடுவது சரியில்லை என தெரிவித்துள்ளார்.

மூலம் - மடவளை நியூஸ் 


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post