
கடந்த 3, 4 தினங்களாக நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி இறுதி மற்றும் பெப்ரவரி மாதங்களின் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் 6.5 வீதமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டபோதும் தற்போது அந்த எண்ணிக்கை 4 அல்லது 4.5 வீதமாக குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் கொழும்பு மாவட்டம் மற்றும் கொழும்பு நகரில் பெருமளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர், எனினும் தற்போது அந்த நிலைமையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது மக்கள் பொறுப்புடன் செயற்படுவதால், நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்