இலங்கையில் கொரொனா மரணங்கள் மேலும் அதிகரித்தது!

இலங்கையில் கொரொனா மரணங்கள் மேலும் அதிகரித்தது!இலங்கையில் கொரொனா தொற்று தொடர்பான மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (24) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 453 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 04 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 457 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இருவர் இன்றும் (24), ஒருவர் நேற்றும் (23), கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர், கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர், கொட்டுகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான ஆண் ஒருவர், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post