அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர வாகன விபத்து! ஐந்து பேர் பலி!

அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர வாகன விபத்து! ஐந்து பேர் பலி!


அமெரிக்காவின் டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் பகுதியில் அதிக பனிப்பொழிவு காரணமாக சுமார் 100 வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளன. இதில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.


வீதியில் இருந்த அதிக பனி காரணமாக கனரக வாகனங்கள் சில கட்டுப்பாட்டை இழக்க, அவை மற்றைய வாகனங்களுடன் மோத, அந்த பகுதியில் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக ஃபோர்ட் வொர்த் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் மைக்கேல் டிரிவ்டால் தெரிவித்துள்ளார்.


விபத்தில் 05 பேர் உயிரிழந்தனர். 36 பேர் வரையில் உள்ளூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வாகனங்களை அகற்றி வீதிப் போக்குவரத்தை சீர் செய்ய நீண்ட நேரம் பிடித்தது. சேதமடைந்த வாகனங்களை மதிப்பிட மேலும் சில நாட்களாகுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.