
வீட்டு முற்றத்தில் நபரொருவரால் தாக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் இறந்துள்ளார், மேலும் கொலை செய்த நபரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் கணவர் செட்டிகுளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்த பின்னர், பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தலையில் மண் வெட்டியினால் தாக்கப்பட்டே அந்த பெண் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணின் கணவர் பொலிஸாரினால் தீவிர விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
செட்டிகுளம் பொலிசார் இக்கொலை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் பூவர்சங்குளத்தில் வசிக்கும் சிவகுமார் சித்ரகலா (42) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இறந்தவரின் சடலம் செட்டிகுளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

