கைதான இளைஞன் விசாரணையின் பின் விடுதலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைதான இளைஞன் விசாரணையின் பின் விடுதலை!


பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் 6 மணிநேரத்தின் பின் விடுவிக்கப்பட்டார்.


இளைஞனிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவரின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இன்று நண்பகல் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 


இளைஞனின் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் முன்பாகக் காத்திருக்கின்றனர். இளைஞனின் தாயார், மகனின் விடுதலையைக் கோரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம்  கதறி அழுதார்.


பருத்தித்துறையில் பேரணி இடம்பெற்ற வேளை இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து அவரை பொலிஸார் கைது செய்தனர். அவர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.