அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளிக்க வழங்க தயார்! -ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளிக்க வழங்க தயார்! -ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி


நாட்டில் நிலவும் பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார பிரச்சினைகள் காரணமாக பொது மக்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளாதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த தேர்தல் காலங்களில் தற்போதைய நிர்வாகத்தின் மீது பொது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டிய்யுள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் வேலை நிறுத்தப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் தமது கடமைகளை நிறைவேற்றத் தவறியதனால், போராட்டங்களுக்கு தலைமைத்தாங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.