இந்த அரசு இலங்கையை வல்லரசுகளின் மோதல் களமாக மாற்றியுள்ளது! -ஐக்கிய மக்கள் சக்தி

இந்த அரசு இலங்கையை வல்லரசுகளின் மோதல் களமாக மாற்றியுள்ளது! -ஐக்கிய மக்கள் சக்தி


வெளிவிவகார கொள்கையை தவறாக கையாண்டதன் காரணமாக அரசாங்கம் இலங்கையை வல்லரசு நாடுகளின்  மோதல் களமாக மாற்றியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.


இலங்கையை இதுவரை ஆண்ட 11 தலைவர்கள் சமநிலை தவறாத வெளிவிவகார கொள்கையை பின்பற்றினார்கள் என லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.


ஆனால் முன்னைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் சீனாவிற்கு பெருமளவு இடத்தை வழங்கியதன் மூலம் அந்த வெளிவிவகார கொள்கையை பின்பற்றவில்லை என லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.


இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கமும் சீனாவிடமிருந்து அதிகளவு கடன்களை பெற்றதன் காரணமாக சீனா இலங்கை விவகாரத்தில் அதிகளவு தலையிட்டு;ள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது இலங்கையை வல்லரசுகளின் மோதல்களமாக மாற்றியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.