நிலங்கள் அபரிகரிப்பதை எதிர்த்து மனு தாக்கல் செய்த ஆதிவாசிகளின் தலைவர்!

நிலங்கள் அபரிகரிப்பதை எதிர்த்து மனு தாக்கல் செய்த ஆதிவாசிகளின் தலைவர்!

ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை மகாவலி அதிகாரசபை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ மற்றும் சுற்றுச் சூழல் நீதி மையத்தால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை மகாவலி அதிகார சபை கையகப்படுத்தி அதனை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, சோளப் பயிரச் செய்கை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொண்டுள்ளதற்கு தடை விதிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.


மகாவலி அதிகாரசபை 50,000 ஏக்கர் காடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான பாரம்பரிய நிலங்களை கையகப்படுத்தியதை சுட்டிக்காட்டிய வன்னில எத்தோ, இந்த நிலங்கள் பல நூற்றாண்டுகளாக தங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.


இந்த நடவடிக்கை அவர்களின் வாழ்வாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், மக்காச்சோளம் பயிரிட அவர்களின் பாரம்பரிய நிலங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் உத்தரவை நீதிமன்றம் வெளியிட வேண்டும் என்று அவர் கூறினார்.


வனஜீவராசிகள் அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர், மகாவலி அதிகாரசபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.