உலக கொரோனா விபரம் - சீனாவின் இடத்தை அண்மிக்கும் இலங்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலக கொரோனா விபரம் - சீனாவின் இடத்தை அண்மிக்கும் இலங்கை!

உலகம் முழுவதும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியே 55 லட்சத்து 825ஆக பதிவாகியுள்ளதென கொவிட் தொற்று தொடர்பிலான தரவுகளை வெளியிடும் இணையத்தளம் குறிப்பிடுகின்றது.

அதேபோன்று, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 96 ஆயிரத்து 434 ஆக பதிவாகியுள்ளதுடன், கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 7 கோடியே, 71 லட்சத்து 99 ஆயிரத்து 149ஆக பதிவாகியுள்ளது.

2 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரத்து 637 பேர் தொடர்ந்தும் சிகிச்சைகளை பெற்றுவரும் அதேவேளை, அவர்களில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 836 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவே முதலில் உள்ளது.

அமெரிக்காவில் 2 கோடியே 72 லட்சத்து 73 ஆயிரத்து 890 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 988 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவதாகவுள்ள இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1 லட்சத்து 54 ஆயிரத்து 862 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், கொவிட் வைரஸ் தொற்று முதலில் ஏற்பட்ட நாடான சீனா, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இன்று 83வது இடத்தில் உள்ளது.


சீனாவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 669 ஆக உள்ள அதேவேளை, அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4636ஆக காணப்படுகின்றது.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இலங்கை இன்று 90வது இடத்தில் உள்ளது

இலங்கையில் கொவிட் தொற்றினால் 67 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 339 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட் தொற்றில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையில் 7 நாடுகள் வித்தியாசம் மாத்திரமே காணப்படுகின்றன.

குறிப்பாக இலங்கையில் கொவிட் தொற்றின் 2வது அலை ஏற்படுவதற்கு முன்னர் 143வது இடத்தில் இலங்கை இருந்தது.

கொவிட் தொற்றின் 2வது அலை தாக்கத்தின் பின்னரே, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இலங்கை 90வது இடத்தை நோக்கி நகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.