மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்ற ஒவ்வொரு அரசாங்கமும் கீழே தள்ளப்பட்டிருப்பதாகவும், தற்போதைய அரசாங்கமும் அந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
2/3 பெரும்பான்மையால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றும் தர்க்கரீதியான மற்றும் தெளிவான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பல சந்தர்ப்பங்களில் 2/3 பெற்ற முந்தைய அரசாங்கங்களும் இதன் முழுமையான பலனைப் பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரத்தை சரியாக நிர்வகிக்காவிட்டால், மக்களை இறுதியில் மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் ஒரு இணையவழி அலைவரிசைக்கு அளித்த பேட்டியில் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.