
பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை தனாக முன்வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்க வைத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசிகளைப் பொது மக்களுக்கு வழங்கவுள்ளதா தெரிவித்துள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது மிகவும் ஆர்வத்துடன் பெற்றுக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகளைச் செலுத்தும் போது 100-75 சதவீதம் நன்மை கிடைக்கும் என்றும் கொரோனா தொற்று ஆபத்தான நிலையிலிருந்து குறைத்துக்கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது பொதுமக்கள் தன்னார்வத் தொண்டுடன் செயற்படவேண்டும்.
குறித்த கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்குக் குறைந்தவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்குச் செலுத்தப்படமாட்டாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.