விமல் வீரவன்ச - பொதுஜன பெரமுன ஆடுவது ஒரு பித்தலாட்டம்! அதிலும் வீரவன்ச சூழலுக்கு ஏற்ப ஆடுவதில் சிறந்த வீரர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமல் வீரவன்ச - பொதுஜன பெரமுன ஆடுவது ஒரு பித்தலாட்டம்! அதிலும் வீரவன்ச சூழலுக்கு ஏற்ப ஆடுவதில் சிறந்த வீரர்!


இந்த அரசாங்கத்திடம் பொய்யும் பித்தலாட்டங்களுமாகத் தான் இருக்கிறது. சிறு பராயத்தில் இரண்டு பிரிவுகளாக விளையாடி இறுதியில் ஒன்று சேர்வது போல இந்த அரசாங்கத்தின் உள்ளேயேயும் இரண்டு பிரிவாக நின்று விளையாடுகின்றனர். இந்த விளையாட்டை 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் போதும், கிழக்கு முனைய விவகாரத்திலும் பார்த்தோம். 


இரு பக்க பிரிவு விளையாட்டை தற்போதைய சூழலுக்கு ஏற்ப சிறந்த வீரராக விமல் வீரவன்ச ஆரம்பித்துள்ளார். இதுவும் சோடிகப்பட்ட விளையாட்டாகும். நாட்டில் உன்மையான பிரச்சிணைகளை மறைப்பதற்காகவும் திசை திருப்புவதற்காகவும் தான் இதைச் செய்கின்றனர்.


இன்று (09) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு தெரிவித்தார்.


அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


ஏற்கனவே பல வர்த்தமானிகள் வெளியிடப்பட்டும் நடைமுறைப்படுத்தாத விலை சூத்திரங்களை இன்று பந்துல குணவர்தனவின் விலை குறைப்பு சூத்திரம் இதை சாத்தியப்படுத்துமா? வெறும் வெற்று சூத்திரங்கள். மக்களை மீளவும் விலை ஏற்றத்தின் பால் கொண்டு செல்லும் நடவடிக்கையின் ஆரம்பமாகும்.


கொரோனா புள்ளி விபரங்களை அரசாங்க தரப்பு மறைக்கிறது. நாளாந்தம் வெளியிடும் புள்ளிவிபரங்கள் பொய்யானது. நாளாந்தம் குருநாகல் வைத்தியசாலையில் ஒருவர் ஒருவர் வீதம் எரிக்கப்படுவதாக அறிகிறோம். மஹிய்யாவயிலும் இவ்வாறு தான் நிலை. கொரோனா சமூகத்தில் சகல மட்டங்களிலும் பரவியுள்ளன. அரசாங்கம் அதனை பொருட்படுத்தாமல் இருக்கிறது.


அரசாங்கத்தின் உன்மை பிரச்சிணை பொருளாதாரமாகும். இதை மறைக்க சோடிக்கப்பட்ட பொய்களை கூறுகின்றனர்.


சுற்றாடல் பாதிப்பு தொடர்பாக ஆதிவாசி தலைவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குருநாகலில் பொரல் அகழ்வுக்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். வரலாற்று சிறப்புமிக்க இடம் அது. இடங்களின் பொறுமதிகளை கஜமிதுரு குழுமம் பெறுமதியற்றதாக ஆக்கி வருகின்றனர்.


ஶ்ரீ மாவோ பண்டாரநாயக்கவின் பிரஜா உரிமை நீக்கத்திற்கு விஷேட  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கையில் நியமிக்கப்பட்ட விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு தான் கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ள அரசியல் பழிவாங்கள் விசாரணை ஆணைக்குழுவாகும். 


பல வழக்குகளை கடந்த அரசாங்க காலத்தில் அரசியல்வாதிகள் அல்லாமல் அரச சட்டமா அதிபராலும் திணைக்களத்தாளும் தொடுக்கப்பட்டவையாகும். ஆனால் இன்று அதன் பரிந்துரைகள் பழிவாங்கள் நடவடிக்கையாக அமைந்து காணப்படுகிறது.


மேலும், ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு இதன்பால் பாரிய பெறுப்பு உள்ளது. ஆட்சி மாற்றத்தின் பிரதான காரணிகளில் முன்னிலை வகிப்பது ஈஸ்டர் தாக்குதலாகும். 


நான் சாட்சியத்திற்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் முக்கிய சாட்சிகள் அடங்கிய இரு இருவட்டுக்களை சமர்பிக்க நான் அனுமதி கேட்டும் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சாட்சியங்களை மறைத்து அரசியல் நோக்கங்களை தான் இதில் செயற்ப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.


ஏன் இது தொடர்பாக தேடாமல் இருக்கின்றனர். காதினலும் இதைத்தான் அடிக்கடி கூறுகிறார். அரசாங்கத்தில் உள்ளவர்கள் தொடர்பு இருப்பதால் தான் தேடாமல் இருக்கின்றனர்.


இந்நிலையில், ஐ.நா வின் மனித உரிமை பிரச்சிணைக்கு அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதா இல்லையா என்ற ஊடகவியலாளரின் கேளவிக்கு பதிலளிக்கும் விதமாக;


ஆதரவளிப்பதா இல்லையா பங்கேற்பை கோருவதா இல்லையா எனபதை அரசாங்கம் தான் ஆரம்பிக்க வேண்டும். கொரோனா நிலையிலும் இதைத்தான் செய்தார்கள். இறுதியில் சர்வ கட்சி கூட்டத்தை ஒரு நாள் தான் நடத்தினார்கள். இது அரசாங்கம் சார்புள்ள தீர்மானமாகும். நாட்டிற்கு போலியான குற்றச்சாட்டின் அடுப்படையில் நடவடிக்கை எடுக்க சர்வதேச தரப்பு முயற்சித்தால் நாட்டிற்காக முன்னிற்போம் என்றும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.