கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையினை மறைக்கின்றனர் - வெளியான தகவல்!

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையினை மறைக்கின்றனர் - வெளியான தகவல்!

ஆய்வகங்களில் கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கைக்கும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கூறுகிறது.

கொரோனா தொற்றாளர்கள் 5,000 பேரில் வேறுபாடு இருப்பதாகவும், அதிகாரிகள் இது குறித்து இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்றும் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

கொரோனா இறப்புகளில் கணிசமான விகிதம் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்கதாக இல்லை என்றும் அவர் கூறினார்.

இது சமூகத்துக்கும் சுகாதார நிபுணர்களுக்கும் இடையே கடுமையான மோதலுக்கு வழிவகுத்ததாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post