
முன்னாள் புரட்சியாளனான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இப்போது அதலபாதாள வீழ்ச்சிக்குச் சென்றுள்லதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் மேலும் தெரிவிக்கையில்,
”ஐநாவுக்கு எதிராக இன்று பொங்கி எழுகிறார், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார..! இவர்தான் கடந்த காலங்களில், பிடல் கஸ்ட்ரோ, சேகுவேரா ஸ்டைலில், “மார்க்சீய புரட்சியாளனாக” இருந்தபோது, 1980களில், அன்றைய ஐதேக அரசு, ஜேவிபி கிளர்ச்சியில், சிங்கள இளைஞர்களை பந்தாடிய போது, அதை எதிர்த்து, இளம் எம்பியாக இருந்த மஹிந்த ராஜபக்சவையும் அழைத்துக் கொண்டு, ஜெனீவாவுக்கே நேரடியாக போனவர்.
அங்கே போய், இதே ஐநா மனித உரிமை குழு (அன்று ஆணைக்குழு அல்ல, வெறும் குழுதான்!), சர்வதேச மன்னிப்பு சபை ஆகியவற்றில் இலங்கை அரசுக்கு எதிராக புகார் செய்தவர்.
அப்போ அப்படி. இப்போ இப்படி. சென்னைக்கு போனால் வடிவேலு விட்ட இடத்தை இவர் பிடிக்கலாம். இதுதான் வாசுதேவ என்ற, ஒரு முன்னாள் புரட்சிக்காரனின், கேவலமான அதலபாதாள வீழ்ச்சி” என்றார் அவர்.
<முன்னாள் புரட்சிக்காரனின், கேவலமான அதலபாதாள வீழ்ச்சி..!> ஐநாவுக்கு எதிராக இன்று பொங்கி எழுகிறார், அமைச்சர் வாசுதேவ...
Posted by Mano Ganesan - மனோ on Saturday, January 30, 2021