நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்த மாணவர் - ஆசிரியர் கைது!

நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்த மாணவர் - ஆசிரியர் கைது!

நீரில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை ஆசிரியரை கல்தோட்ட பொலிஸார் நேற்று (31) கைதுசெய்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் தன்ஜன்தென்ன பாடசாலையின் 16 மாணவர்கள் அடங்கிய குழுவை வெளிப்புற நடவடிக்கைக்காக வளவ ஆற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது 16 வயதுடைய மாணவியொருவர் நீரில் மூழ்கி காணமல்போனதுடன், பின்னர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந் நிலையிலேயே சம்பவம் தொடர்பில் கைதான ஆசிரியரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில், அவர் மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைக்காக அழைத்துச் செல்வதற்கு அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எவ்வாறெனினும் ஆசிரியர் இன்றைய தினம் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.