இம்ரான் கானின் வருகையை ஒட்டி ஒத்திகை; விமான நிலையத்தில் துப்பாக்கி ரவைகலுடன் பொலிஸ் அதிகாரி கைது!

இம்ரான் கானின் வருகையை ஒட்டி ஒத்திகை; விமான நிலையத்தில் துப்பாக்கி ரவைகலுடன் பொலிஸ் அதிகாரி கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள், T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 15 துப்பாக்கி ரவைகளை கொண்டு செல்ல முயற்சித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் குறித்த பொலிஸ் அதிகாரியின் உடமையில் இந்த துப்பாக்கி ரவைகள் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த அதிகாரி நேற்றைய தினம் (19) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமரை வரவேற்பதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் விமான நிலையத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த சந்தர்ப்பத்திலேயே, குறித்த பொலிஸ் அதிகாரி, விமான நிலையத்திற்குள் துப்பாக்கி ரவைகளை கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.