கொரோனா தொற்றில் பலியான முதல் பொலிஸ் உத்தியோகத்தர்!

கொரோனா தொற்றில் பலியான முதல் பொலிஸ் உத்தியோகத்தர்!


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


இது நாட்டில் கொரோனாவால் பதிவான முதலாவது பொலிஸ் உத்தியோகத்தரின் மரணம் என சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.


மொனராகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 59 வயதான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், இந்த வருடத்துடன் ஓய்வுபெற இருந்துள்ள நிலையில் அண்மையில், நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது அவருக்கு முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளின் போதே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..


இந்நிலையிலேயே அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று  உயிரிழந்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.