செய்தி அறிக்கையிடலுக்காக வந்த ஊடகவியலாளரை புகைப்படம் பிடித்து மிரட்டிய மூவர்!

செய்தி அறிக்கையிடலுக்காக வந்த ஊடகவியலாளரை புகைப்படம் பிடித்து மிரட்டிய மூவர்!

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை வனவள திணைக்கள பெரும்பான்மை இன உத்தியோகத்தர்கள் மூவர் அச்சுறுத்திய சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

தமது விவசாய நிலங்களை துப்பரவு செய்த கிராம வாசியை பௌத்த தேரர் ஒருவர் அச்சுறுத்தி பொலிஸாரை அழைத்து தடை விதித்த சம்பவம் தொடர்பில் கிராம மக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் அவ்விடத்துக்கு குறித்த ஊடகவியலாளர் செய்தி சேகரிப்புக்காக சென்றுள்ளார்.

அங்கு நடக்கும் சம்பவங்களை செய்தி அறிக்கையிடல் செய்து கொண்டிருந்த வேளை அவ்விடத்துக்கு வருகை தந்த முள்ளியவளை வட்டார மேலதிக வன அதிகாரி ரணசிங்க என்பவர் தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததோடு சக வன அதிகாரி இந்திரஜித் என்பவரோடு இணைந்து ஊடகவியலாளரிடம் பெயர் விலாசம் போன்ற தகவல்களை வழங்குமாறு கேட்டு விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது இவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்த குறித்த ஊடகவியலாளர் தான் பத்திரிகையாளர் என்ற தனது அடையாளத்தை உறுதிப் படுத்தியதோடு, வீதியில் நின்று கடமையில் ஈடுபடும் தன்னை வன திணைக்கள அதிகாரி புகைப்படம் எடுப்பதும் விபரங்களை கேட்டு பதிவதன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் நான் வீதியில் நின்றே கடமை செய்கின்றேன், நீங்கள் வன திணைக்களம் ஏன் என்னிடம் இவ்வாறு தகவல் கேட்கின்றீர்கள், நான் வன பகுதிக்குள் எங்கும் நுழைந்து செய்தி சேகரிக்கவில்லையே எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.