ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலருக்கு நீதிமன்ற தடையுத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலருக்கு நீதிமன்ற தடையுத்தரவு!


ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் கட்சி உறுப்புரிமை ரத்துச் செய்யப்பட்ட கொடகவெல பிரதேச சபையின் உப தலைவர் கே.ஜீ.உபாலி சந்திரசேனவிற்கு பதிலாக வேறொருவரை குறித்த பதவிக்கு நியமிப்பதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவொன்று வௌியிடப்பட்டுள்ளது.


கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துகொண்ட இரண்டு கூட்டங்களில் கலந்து கொண்டமை காரணமாக அவரின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டது.


உபாலி சந்திரசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை பரிசீலனை செய்த பின்னர் கொழும்பு மாவட்ட நீதவான் அருண அலுத்கேவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


$ads={1}


குறித்த முறைப்பாட்டில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர், அமைச்சர மஹிந்த அமரவீர மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று குழுவின் தலைவர் சஞ்சய கமகே ஆகியோருக்கு இந்த தடையுத்தரவு வௌியிடப்பட்டுள்ளது.


இந்த இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.