கண்ணியம், ஆன்மீக சுதந்திரம் மூலமே சுதந்திரம் பூரணமடையும் - தேசியத்தலைவர் சஹீட் எம். ரிஸ்மி சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்ணியம், ஆன்மீக சுதந்திரம் மூலமே சுதந்திரம் பூரணமடையும் - தேசியத்தலைவர் சஹீட் எம். ரிஸ்மி சுதந்திர தின வாழ்த்துச் செய்தி



இலங்கையின் 73 ஆவது தேசிய தினத்தை பேரபிமானத்துடன் கொண்டாடும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற இலங்கை மக்களுக்கும், நாட்டின் நலன் விரும்பிகள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்த சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றேன் என, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

எமது நாடு சுதந்திரம் அடைய சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவருமே தமது பங்களிப்புக்களை அர்ப்பணிப்புடன் செய்துள்ளனர். இதன் பயனாக, ஆங்கிலேயரிடமிருந்து எமது நாடு விடுதலை அடைந்து, 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக் கொண்டது. இதனைப் பெற்றுக் கொடுப்பதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளை இன்று நாம் நினைவு கூர வேண்டியது, எமது அனைவரினதும் தலையாய கடமையாகும்.

நாம் பெற்றுக்கொண்ட இந்த சுதந்திரத்தை, அதனைப் பெற்றுக் கொடுத்தவர்கள் கண்ட கனவை நனவாக்க வேண்டும். சுதந்திர இலங்கையின் பிரஜையாக இருப்பதை, நாம் அனைவரும் பெருமையாகக் கொள்வதைப் போல், எமது இலங்கைத் தாய் நாட்டையும் நாம் அனைவரும் நேசிக்க வேண்டும். இந்த நாட்டின் மீது பற்றுள்ளவர்களாகவும், இந்த நாட்டின் அபிவிருத்திக்காகவும் எங்களை நாம் அர்ப்பணித்துச் செயற்பட வேண்டும்.

நாம் பெற்றுக் கொண்ட இந்த சுதந்திரத்தை, அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க வேண்டும். இதற்கு இன, மத, மொழி, கட்சி, நிற பேதங்களையும் தாண்டி, "ஒரே நாட்டு மக்கள்" என்றவாறு அபிமானத்துடன், அமைதியாக, ஒற்றுமையாகச் செயற்படுவது, இன்றைய கால கட்டத்தில் நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.

கண்ணியம், ஆன்மீக சுதந்திரம் உருவாகுவதன் மூலமே சுதந்திரம் பூரணத்துவமடைகின்றது.




( ஐ. ஏ. காதிர் கான் )
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.