இலங்கையில் இருந்து தண்ணீர் ஏற்றுமதி செய்ய திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இருந்து தண்ணீர் ஏற்றுமதி செய்ய திட்டம்!

பந்துல குணவர்த்தன
பாரம்பரிய ஏற்றுமதிக்கு மேலதிகமாக, தண்ணீரை ஏற்றுமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


நுவரேலியா, ஹோப் எஸ்டேட்டில் உள்ள நீர் ஊற்றுக்கள் குறித்து ஹந்தனை அடிப்படைக் கற்கைகள் நிறுவனத்தின் பேராசிரியர்கள் குழு நடத்திய ஆய்வின் அறிக்கையை வெளியிடும் ஆரம்ப வைபவத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். 


அவர் மேலும் தெரிவித்ததாவது,


ஜனதா தோட்ட அபிவிருத்தி கூட்டாக்கத்தின் கீழ் உள்ள நுவரேலியா. ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த நீர் ஏற்றுக்களின் ஒரு பகுதியை எதுவித வடிகட்டலும் இன்றி பயன்படுத்த முடியும் என்றும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன. 


பேராசிரியர்கள் சமன் செனவீர, ரோஹன் வீரசூரியா, அத்துல சேனாரத்ன மற்றும் லக்மல் ஜெயரத்ன ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டு, சுத்திகரிக்காமல் குடிக்கலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.


வர்த்தகத்துறைக்கு பொறுப்பான அமைச்சராக, ஏற்றுமதியை ஊக்குவித்தல் மற்றும் சந்தை வாய்ப்புக்களை பன்முகப்படுத்துதல் மற்றும் மேற்கு ஐரோப்பாவை நோக்கி சந்தையை ஆபிரிக்க மற்றும் ஆசிய பிராந்தியங்களுக்கு மாற்றும் பொறுப்பு முதலாளனவை தமக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.


இலங்கையானது நீர்வளம் நிறைந்ததாகவும், நீர் முகாமை மற்றும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நீரை பரிமாற்றம் செய்யக்க கூடிய வரலாற்றுப் பாரம்பரியத்தையும் கொண்ட நாடாகும். நீரை மையமாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவது எங்களுக்கு அவ்வளவு கடினமான ஒரு விடயமல்ல.


குடிநீர் போத்தல் வர்த்தகம் உள்ளூரில் பாரியளவில் மேற்கொள்ளப்படும் ஒரு வர்த்தகமாகும், தரமான குடிநீர் போத்தல்களை சந்தைக்கு விடுவது குறித்து ஆராய வேண்டியது நுகர்வோர் விவகார அதிகார சபையின் பொறுப்பாகும்.


எஸ்.எல்.எஸ் தரநிலைச் சான்றிதழ் இல்லாமல் தண்ணீர் போத்தல்களை விற்கப்படும் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. உள்ளூர் நுகர்வோருக்கு உயர் தரத்தில் தண்ணீரை வழங்குவதில் கவனம் செலுத்தும் அதே நேரம், தண்ணீர் ஏற்றுமதி மூலம் அதிகளவு ஏற்றுமதி வருவாயை ஈட்டவும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


ஏற்றுமதி மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூபா 10 முதல் 11 பில்லியனை சம்பாதிக்கும்போது, ​​இறக்குமதி மூலம் ரூபா 20 முதல் 22 பில்லியனை செலவிடுகிறோம், இதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் சுமார் 10 பில்லியன் டொலர் பற்றாக்குறை நீண்ட காலமாகவிருந்தே காணப்படுகிறது என்று அவர் கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.