ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி விசாரணை அறிக்கை எம்மிடமே கையளிக்கப்பட வேண்டும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி விசாரணை அறிக்கை எம்மிடமே கையளிக்கப்பட வேண்டும்!

gnansara thero sri lanka extremist

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சாரம்சத்தை எம்மிடமே வழங்க வேண்டுமென பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


இவ்விடயம் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் ஊடக செயலாளர், ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.


குறித்த கடிதத்தில் பொதுபல சேனா அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது, 


"இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் கடந்த 2019.04.21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்து  விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், பொதுபல சேனா அமைப்பு மற்றும் ஞானசார தேரருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதான  ஊடக சேவை தலைப்புச் செய்தியில் வெளியிட்டுள்ளது.


இந்நிலையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதிக்கு மாத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.


குறித்த அறிக்கை நாடாளுமன்றத்திற்கோ அல்லது ஏனைய தரப்பினருக்கோ இதுவரையில் வழங்கப்படவில்லை. எமது அமைப்பு குறித்து அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் விடயங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளமை பொதுபல சேனா அமைப்பிற்கு இழைக்கும் அநீதியாகவே கருத முடியும்.


மேலும் பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் பிரதான ஊடகத்தில் வெளியாகியுள்ள  செய்தியை ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகவே  குறித்த ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.


இந்த தகவல், மக்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்தினை தோற்றுவித்துள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பாக எமது அமைப்பின் சார்பில் சாட்சியங்களை பெறுவது அவசியமாகும்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.