உடல்களை கட்டாய தகனம் செய்யக்கோரி இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு முஸ்லீம்கள் வேண்டுகோள் விடுக்ககூடாது! -பைசர் முஸ்தபா

உடல்களை கட்டாய தகனம் செய்யக்கோரி இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு முஸ்லீம்கள் வேண்டுகோள் விடுக்ககூடாது! -பைசர் முஸ்தபா


கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாய தகனத்திற்கு உட்படுத்துவதற்காக இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு முஸ்லீம்கள் வேண்டுகோள் விடுக்ககூடாது என முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார் என சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.


அமைதியான முறையில் உரிமைகளை பெற முயல்வது தவறில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் முஸ்லீம்கள் இதனை அடைவதற்காக சர்வதே தடைகளை கோரக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், ஏனைய சுகாதரர பிரச்சினைகள் உருவாகலாம் என்பதற்கான விஞ்ஞானரீதியிலான ஆதாரங்கள் எதுவுமில்லை என உலகப் புகழ்பெற்ற தொற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.


உடல்களை புதைப்பது முஸ்லீம்களின் அடிப்படை உரிமை என தெரிவித்துள்ள அவர் நான் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தேன் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


நான் 20 மாத குழந்தையின் உடல் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டமைக்கு எதிராகவும் மனுதாக்கல் செய்திருந்தேன் என தெரிவித்துள்ள அவர் இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு;ள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஆளும் கட்சி எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ளவர்கள் இந்த விவகாரத்திற்கு தீர்வை காண முயல்கின்றனர் இதில் அரசியல் நோக்கம் உள்ளதாக நான் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளில் உள்ள முஸ்லீம்கள் எங்கள் உரிமைகளிற்கு குரல் கொடுக்கின்றனர் ஆனால் அவர்கள் இலங்கைக்கு எதிராக சர்வதேச தடைகளுக்கு வேண்டுகோள் விடுக்க கூடாது எனவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.


சர்தேச அளவில் எங்கள் நாடு பாதிக்கப்பட்டால் முஸ்லீம்கள் பாதிக்கப்படுவார்கள் ஏனைய சமூகங்களுடனான எங்கள் உரிமை பாதிக்கப்படும் எங்கள் உரிமைகளை பெறுவதற்காக அரசாங்கத்திற்கு சர்வதேச அளவில் அழுத்தங்களை கொடுக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.