உலகம் பூராக பரவியுள்ள கொரோனா வைரஸ் கிருமிகளை இதனுள் அடைத்து விடலாம்! -கணிதவியலாளர் கிட் யேட்ஸ்

உலகம் பூராக பரவியுள்ள கொரோனா வைரஸ் கிருமிகளை இதனுள் அடைத்து விடலாம்! -கணிதவியலாளர் கிட் யேட்ஸ்


தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் கிருமிகளை ஒரு கொக்ககோலா டின்னுக்குள் எளிதில் அடைத்து விடலாமென பிரிட்டிஷ் கணிதவியலாளர் கிட் யேட்ஸ் கணக்கிட்டுள்ளார்.


நோய்த் தொற்றுகளின் உலகளாவிய விகிதங்களைப் பயன்படுத்தி, வைரஸ் சுமை மதிப்பீடுகளுடன் இந்த மதிப்பீட்டை செய்த பாத் பல்கலைக்கழக கணித நிபுணர் கிட் யேட்ஸ், கிட்டத்தட்ட இரண்டு குவிண்டிலியன் – அல்லது இரண்டு பில்லியன் – கொரோனா வைரஸ் துகள்கள் அல்லது SARS-CoV2 உலகம் முழுவதும் பரவியிருப்பதாக கணக்கிட்டுள்ளார்.


தனது கணக்கீடுகளின் படிகளை விவரித்த யேட்ஸ், SARS-CoV-2 இன் விட்டம் – சராசரியாக சுமார் 100 நானோமீட்டர் அல்லது ஒரு மீட்டரின் 100 பில்லியனை விட குறைவானதென குறிப்பிட்டார்.


உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் கிருமிகள், ஒரு 330 மில்லிலிட்டர் (11.16 அவுன்ஸ்) கொக்க கோலா ரின்னை விட குறைவாகவே உள்ளது என்றார்.


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் தொகுத்த தரவுகளின்படி, இதுவரை 2.34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா  நோயால் இறந்துள்ளனர், மேலும் உலகளவில் கிட்டத்தட்ட 107 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.