செல்வந்தரின் மகளை ஆபாசமாக படம் பிடித்து மாதந்தோறும் கப்பம் கோரிய ஆசிரியர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

செல்வந்தரின் மகளை ஆபாசமாக படம் பிடித்து மாதந்தோறும் கப்பம் கோரிய ஆசிரியர் கைது!


செல்வந்த வர்த்தகர் ஒருவரின் மகளுக்கு பகுதி நேர வகுப்பை நடத்தச் சென்று, அந்த மாணவியை ஆபாசமாக படம் பிடித்து அதனை இணையத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


உயர் தர வகுப்புக்கான பௌதீக விஞ்ஞானப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.


இந்த சம்பவம் குறித்து இலங்கையில் பல ஹோட்டல்களை நடத்தும் செல்வந்த வர்த்தகர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


இந்த வர்த்தகரின் மகளுக்கு கற்பிக்க சென்றுள்ள குறித்த ஆசிரியர் அந்த மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளதுடன் அவற்றை இணையத்தளங்களில் பதிவேற்றாது இருக்க மாதந்தோறும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணத்தை வழங்க வேண்டும் என கோரியுள்ளதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது என குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


சந்தேகநபர் ரஷ்யாவில் இருக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் வர்த்தகரின் மகளது புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளதை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.


இந்த சந்தேகநபரின் தொலைபேசியை பரீட்சித்த போது, வர்த்தகரின் மகளது புகைப்படங்கள் மாத்திரமல்லாது, மேலும் சில பாடசாலை மாணவிகள் மற்றும் சில தாய்மாரை ஆபாசமாக எடுத்த படங்களும் இருந்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.


இதனையடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சந்தேகநபர் குற்றவியல் தண்டனை சட்டத்தின் 345,372 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் செய்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக் கூடததின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சீ.சேனாரத்ன நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.