
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடியில் வசிக்கும் இராமகிருஷ்ணன் மயூரன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் சந்திவெளியிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது மாவடிவேம்பு பகுதியில் வைத்து எதிரே வந்த மற்றுமோர் மோட்டார் சைக்கிளில் மோதி படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மாவடிவெம்பு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.