
இம்முறை தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 04ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தின நிகழ்வு இடம்பெறவுள்ளமை தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இம்முறை நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.