ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோவ்ஷீல்ட் தடுப்பூசி இன்று (15) முதல் பொது மக்களுக்கு செலுத்தப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றும் அதிக வாய்ப்புள்ள குழுக்களையும், பொது மக்களையும் தேர்ந்தெடுத்து இன்று முதல் இத்தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.