ரத்தன தேரரின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் அலி சப்ரி!

ரத்தன தேரரின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் அலி சப்ரி!

முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளை 2ஃ27 கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கான காலம் தற்போது வந்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் திருமண சட்டத்தின், திருமண பந்தத்தில் இணைய குறைந்தது 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற விடயத்தை உள்வாங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, பெண் காதிமார்களை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கும் இயலுமான வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், திருமணத்தில் இணையும் முஸ்லிம் பெண்களும், ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இலங்கையிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் ஒரே விதமாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.