கடந்த 24 மணித்தியலத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான விபரம்!

கடந்த 24 மணித்தியலத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான விபரம்!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்று உறுதியான 942 தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்று (11) மாத்திரம் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு 2 பகுதியில் 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கோட்டை பகுதியில் 21 பேருக்கும் மட்டக்குளி பகுதியில் 19 பேருக்கும் கொட்டாஞ்சேனை பகுதியில் 8 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 181 பேருக்கும் கண்டியில் 102 பேருக்கும் மாத்தறையில் 84 பேருக்கும் நேற்று தொற்று உறுதியானதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அத்துடன் களுத்துறையில் 79 பேருக்கும் காலியில் 23 பேருக்கும் இரத்தினப்புரி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தலா 19 பேருக்கும் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 15 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதவிர பதுளை மாவட்டத்தில் 8 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.